இரயிலில் பயணத்தின் இடையே குழந்தை பிரசவம்
ஐந்தாம் மாதம் எனக்கு வளை காப்பு நடைபெற வேண்டும். நான் அவரிடத்தில் கேட்டுப் பார்த்தேன். அவர் எதுவும் பேசாமல் இருந்தார்.
அப்போது என் வீட்டிற்கு வருபவர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் சுற்றத்தார் என்னிடம் வளை காப்பு பற்றி கேட்க ஆரம்பித்தார்கள். வெளியூரில் இருக்கும் உறவினர்களை சமாளித்து விடலாம். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் மற்றும் சுற்றத்தார் கேட்கும் சமயம் நான் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்தேன்.
அதன் பின்னர் எனக்கு தாலி கட்டிய கணவரிடத்தில் கொஞ்சம் பணம் கேட்டேன். ஏனென்று கேட்ட சமயம் அக்கம் பக்கத்தார் எல்லோரும் வளை காப்பு எப்போது என்று கேட்கின்றார்கள். என்னால் அவர்களுக்கு பதில் சொல்லி முடியவில்லை. எனவே நீங்கள் பணம் கொடுத்தால் அருகில் உள்ள கடைக்குச் சென்று நானே வளையல்களை வாங்கி கையில் போட்டுக் கொள்வேன். அவ்வாறு போட்டுக் கொண்டு விட்டால் என்னிடம் எவரும் வளை காப்பு பற்றி கேட்க மாட்டார்கள் என்று சொன்னேன்.
நான் அப்படி சொன்னவுடன் வளை காப்பினை ஐந்தாம் மாதமோ அல்லது ஏழாம் மாதமோ நடத்தலாம் என்று ஒரு வார்த்தை கூட பேசாமல் என்னிடம் பணம் கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டேன்.
சென்ற முறை அவர் வந்திருந்த சமயம் அடுத்த மாதம் முதல் வெள்ளிக் கிழமையன்று அவருடன் பணியாற்றும் 40 தோழியர் அனைவருக்கும் டிரீட் கொடுத்து என்னுடைய வளைகாப்பினை அனைவரும் கொண்டாடப் போவதாக சொன்ன அந்த நாளில் நானே என்னுடைய கைகளால் அவருடைய தோழியர் ஆசை ஆசையாக அவர் மூலம் கொடுத்து அனுப்பிய கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டேன்.
நான் அணிந்துள்ள வளையல்களைப் பார்த்து அக்கம் பக்கத்தார் சந்தோஷப்பட்ட அதே சமயம் அவர்களை அழைக்கவில்லை என்று அவர்களின் ஆதங்கத்தை வெளிப் படுத்தினார்கள். நான் எதுவும் பேசவில்லை.
அவரது தோழியர் எனக்கு வாங்கிக் கொடுத்த வளையல்களை நான் அணிந்து கொண்ட பின்னர் அந்த வளையல்களின் ஓசை அவரே என்னைப் பெயர் சொல்லி அழைப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அன்றைய தினம் அவரை எதிர் பார்த்தேன். அவர் வரவில்லை.
அடுத்த வாரம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அவர் வருவார் என்று எதிர் பார்த்தேன். வழக்கமாக மாதா மாதம் இரண்டாம் ஞாயிற்குக் கிழமை வருபவர் அந்த மாதம் முழுவதும் வரவில்லை.
எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏங்கிக் காத்திருந்தது எனக்கு ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அடிக்கடி என் இல்லத்திற்கு வந்து செல்வதால் பழையன எல்லாம் ஞாபகத்திற்கு வந்து வருத்தப் படுவதாகவும் வருகையை குறைத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்த படி நடந்து கொள்கின்றாரோ என்று எண்ணினேன்.
அடுத்த முறை அவர் என்னைப் பார்க்க வரும் சமயம் எனக்கு எட்டு மாதங்கள். அவர் வரும் சமயம் நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அவர் என் இல்லத்திற்குள் புகுந்த சமயம் மிகவும் களைப்பாக இருந்தேன். இருந்தாலும் வந்தவரை வரவேற்று அமரச் சொன்ன பின்னர் அவர் சோபாவில் அமர்ந்து கொண்டார். நான் அன்றைய தினம் காலையில் சிற்றுண்டி தயாரிக்கவில்லை. எனவே நான் அவருக்காக ஏதேனும் சிற்றுண்டி தயாரிப்பதாக தெரிவித்தேன்.
அப்போது அவர் நான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும் ஒரு டம்ளர் தண்ணீரில் குளுகோஸ் மாத்திரம் கலந்து கொடுத்தால் போதும் என்று சொன்னார். அவர் கொன்னபடி நான் குளுகோஸ் கலந்த தண்ணீரைக் கொடுத்த சமயம் நான் குடிக்க முடியும் என்று தெரிந்த பின்னர் அதனை தேவாமிர்தமாக கருதி பருகியதோடல்லாமல் அவர் ஒரு பகுதியினை குடித்துவிட்டு எனக்கும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இரண்டு பங்கு கொடுத்த சமயம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதன் பின்னர் வளைகாப்பு விவரம் பற்றி கேட்ட சமயம் நான் மிக்க வருத்தத்துடன் ஐந்தாம் மாதமும் வளை காப்பு நடத்தவில்லை. ஏழாம் மாதமும் நடததவில்லை. அதற்கு பதிலாக அவர் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல்களை சென்ற மாதம் முதலாவாது வெள்ளிக் கிழமையன்று அவர் தன் தோழியர்களுக்கு டிரீட் கொடுத்த அன்று நானாகவே அணிந்து கொண்டு சந்தோஷப் பட்டேன் என்று சொன்னேன்.
என்னை அழைத்துச் செல்ல என் தாயார் வராதது வருத்தத்தை தந்தாலும் அவர் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல்கள் எனது பெயரினைச் சொல்லி அவர் அழைப்பது போல் இருக்கின்றது என்று சொன்னவுடன் என்னிடம் என்னுடைய இரண்டு கைகளையும் அசைத்து அந்த ஓசையினை உன்னிப்பாக கவனித்தார்.
ஆனால் அவர் வளையல் ஓசை பிறக்கப் போகும் பெண் குழந்தையை விஜி விஜி என்று அழைப்பது போல இருக்கின்றது என்று சொன்னார். நானும் அந்த ஓசையை கூர்நது கவனித்த சமயம் அவர் சொல்வது போலவே இருந்தது. ஆமாம் அவர் எனக்கு பெண் குழந்தை தான் கட்டாயம் பிறக்கும் என்றும் அதன் பெயர் விஜி தான் என்றும் ஊர்ஜிதப் படுத்தி விட்டார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தால் நான் நன்றாகச் சிரித்தேன்.
நான் அதிகமாக சிரித்த காரணத்தால் எனக்கு வயிற்று வலி கூடி விட்டது என்பதனால் நான் கஷ்டப் படுவதை அவர் உணர்ந்து கொண்டு உடனடியாக மருத்துவ மனை செல்லலாம் என்று சொன்னார். நான் நேற்று கணவருடன் சென்ற சமயம் மருத்துவ மனையில் தங்குமாறு சொல்லியும் தங்க விடாமல் அழைத்து வந்து விட்டார். தற்போது மீண்டும் மருத்துவ மனைக்கு சென்றால் அவர் கோபப் படுவார் என்று சொன்னேன்.
என்னிடம் அவர் கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படும். வாந்தி ஏற்படுகின்ற காரணத்தால் உடம்பில் நீர்ச் சத்து குறைந்து உடல் நலம் பாதிக்கும் எனவே முதல் மூன்று மாதங்களில் பயணம் மேற்கொள்ளுவது நல்லதல்ல என்று சொன்னார். அதே போல கடைசி மூன்று மாதங்களில் கூட நெடுந்தூர பயணம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் நிறைமாத்தில் மட்டும் பிரசவம் நடக்கும் என்று கட்டாயம் சொல்ல முடியாது. சில சமயங்களில் குறைப்பிரவசமும் ஏற்படலாம்.
அத்துடன் நாம் கடைசியாக மாதவிடாய் ஆன தேதிக்குப் பின்னர் அடுத்த மாதவிடாய் நின்றது என்பது மட்டும் நமக்குத் தெரியும் ஆனால் கருவில் எப்போது கரு உருவானது என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே கணக்கு சரியாக இல்லாவிடில் 8 மாதத்திற்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் கர்ப்பிணிகளின் உயரம் அல்லது எடை அல்லது உடல் பருமன் இவற்றைப் பொறுத்து பிரசவ காலம் மாறு படலாம். எனவே ஏழாம் மாதம் வளை காப்பு முடிந்தவுடன் கர்ப்பிணிப் பெண்ணை தாய் வீட்டார் வெளியூராக இருந்தால் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் என்பதனை விளக்கினார்.
அதன் பின்னர் அவர் என்னை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விடச் சொல்லுமாறு கேட்டாயா என்று கேட்டதற்கு நான் பல முறை கேட்டுப் பார்த்து விட்டேன் அவர் அழைத்துக் கொண்டு போய் ஊரில் விட விருப்பம் இல்லாமல் இருக்கின்றார்.
எந்த நேரத்தில் என்னாகுமோ என்ற பயம் எனக்கு வந்து விட்டது என்று சொன்னேன். அதுவும் தவிர நேற்று மருத்துவ மனை சென்ற சமயம் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என்று சொன்னார்கள். அப்படி சொல்லியும் கூட என்னை மருத்துவ மனையிலிருந்து அழைத்து வந்து விட்டார் என்று சொன்னேன். உடனே அவர் என்னை தம்முடன் வர முடியுமா என்று கேட்டதற்கு நான் மறுத்து விட்டேன்.
அதன் பின்னர் எப்போது ஊருக்குப் புறப்படுகின்றீர்கள் என்பதனை மட்டும் எனக்கு தெரிவித்தால் அதே நாளில் ஊருக்கு புறப்படுவதற்கு அரை மணி நேரத்தில் இரயில் டிக்கட்டினை தாம் ஏற்பாடு செய்வதாக கூறினார். அப்போது என்னுடைய தாயார் வந்தால் தான் முடிவு எடுக்க முடியும் என்று சொன்னதைக் கேட்டு சற்று சோகமடைந்தார்.
அவர் தன்னுடைய சோகத்தை மறைக்கவும் என்னை சந்தோஷப் படுத்தவும் பழங்களை அவர் கரங்களால் எனக்கு ஊட்டி விட்டார். அதே சமயம் அவரும் உண்டு என்னை சந்தோஷப் படுத்தினார். இருந்தாலும் திரும்புவதற்கு மனமில்லாமல் என்னை விட்டுப் பிரிந்து சென்றவுடன் நான் அழுது விட்டேன்.
அவர் சென்ற பின்னர் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னுடைய தாயார் திடீரென என்னை அழைத்துச் செல்ல வந்து சேர்ந்தார்கள். நான் என் தாயாரை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை செய்த சமயம் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் நெடுந்தூர பயணம் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் என் தாயார் அவரிடம் உண்மையை தெரிவிக்காமல் ஊருக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி இரயிலில் பயணம் செய்ய ரிசர்வேஷன் டிக்கட் வாங்கி விட்டார்கள்.
என் தாயார் வந்திருந்த சமயம் என்னைத் தேடி அவர் என் வீட்டிற்கு வந்த சமயம என்னுடைய தாயார் அவரிடம் இங்கேயும் வந்து என் மகளைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டாயா என்று கேட்ட சமயம் என் கணவர் வீட்டில் இருந்ததால் நான் பயந்து போய் விட்டேன்.
உடனே நான் என் தாயாரிடம் நாவை அடக்கி பேசு என்று சொன்னேன். அதன் பின்னர் நீ பேசுவது அவர் காதில் விழுந்தால் நம் இருவரையும் வீட்டை விட்டு துரத்தி விடுவார் என்று சொன்ன பின்னர் அவர் என்னிடம் நான் ஊருக்கு செல்ல வாங்கியிருந்த டிக்கட்டுகளை வாங்கி இருக்கை விவரம் தேதி இரயில் வண்டி விவரம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் உடனே புறப்பட்டு விட்டார்.
நான் அவரைக் காண வேண்டும் அவருடன் பேச வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்கி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சமயம் என்னுடைய வீடு தேடி வந்தவரை என்னுடைய தாயார் இப்படி அவமானப் படுத்தி அமரக் கூடச் சொல்லாமல் ஒரு டம்ளர் காபியினைக் கூட கொடுக்க விடாமல் துரத்தியது எனக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை கொடுத்தது.
எனக்குத் திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆன பின்னாலும் என் தாயார் அவரிடம் இப்படி நடந்து கொள்கின்றார் என்றால் என்னுடைய திருமணத்திற்கு முன்னர் என்னைப் பெண் கேட்டு வந்திருந்த சமயம் அவரை எப்படியெல்லாம் அவமானப் படுத்தி நடு ரோட்டில் தள்ளி விட்டிருப்பார் என்பதனனை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
அவர் குடித்த பின்னர் எனக்கு கொடுக்கும் பானத்தை அருந்த முடியாத காரணத்தால் என் தாயார் மீது இருந்த கோபம் இன்னும் அதிகமாகி விட்டபோதிலும் சூழ்நிலை காரணமாக நான் எதனையும் வெளிக் காட்ட முடியவில்லை. என்னையும் அறியாமல் என் உள் மனம் வேதனைப் பட ஆரம்பித்து விட்டது.
இரயில்வே ஸ்டேஷன் வரையில் வந்து என்னையும் என் தாயாரையும் என்னைத் தொட்டுத் தாலி கட்டிய என் கணவர் வழியனுப்பி வைத்தார். ஆண் துணை இல்லாமல் நானும் என் தாயாரும் மாத்திரம் இரயிலில் பயணம் மேற்கொண்டோம்.
எனக்கு எப்படி அவசர கோலமாக என் தாயார் திருமணம் நடத்தி வைத்தார்களோ அதே போன்று துரதிருஷ்ட வசமாக நான் இரயிலில் பயணிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் பிரசவ வலி எனக்கு ஏற்பட்டு விட்டது அப்போது டிக்கட் பரிசோதகர் வந்த சமயம் விவரம் சொன்னவுடன் அவர் அடுத்து வரப் போகின்ற பெரிய இரயில்வே ஸ்டேஷனுக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
புறப்பட்ட ஊருக்கும் செல்ல விருக்கும் ஊருக்கும் இடையிலேயே வந்த பெரிய ஊரில் நான் இரயிலிலிருந்து மருத்துவ மனை ஊழியர்களால் ஸ்ட்ரெட்சரில் இறக்கப் பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனை கொண்டு செல்லப் பட்டேன்.
ஒரு பக்கம் நான் பிரசவ வலியால் துடித்த போதிலும் அவர் சொன்னதை கேட்டு இருந்தால் அவராவது எனக்கு ஆண் துணையாக வந்திருப்பார் என்று நினைத்தேன். எது எப்படியோ நான் என் வீட்டிலும் இல்லாமல் என் சொந்த ஊருக்கும் போக முடியாமல் நடு வழியிலேயே பிரசவம் ஆனது. அதன் பின்னர் அவசர அவசரமாக எனக்குத் தாலி கட்டியவரை வரவழைத்து அங்கு பிரவத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய படி அந்த நரகத்திற்கே திரும்பி அழைத்துச் செல்லப் பட்டேன்.
இடைப் பட்ட காலத்தில் அவர் என்னிடம் இரயில் விவரம் பயணம் செய்யப் போகும் இருக்கை விவரம் குறித்துக் கொண்டு சென்றுள்ளார். அவர் எனக்காக காத்திருந்து எப்படி தவிக்கின்றாறோ என்னும் கவலை என்னைத் தொற்றிக் கொண்து.
அதே சமயம் அவர் என்னுடைய கண்ணாடி வளையல்களில் ஓசையைக் கேட்டு அவர் சொன்னபடி எனக்கு பெண் குழந்தை தான் பிறந்தது என்பதனை நினைக்கும் போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.