அறுவை சிகிச்சைக்கு சொந்த ஊர் செல்லுதல்
ஒரு முறை ஒரே ஒரு முறை எனது வீட்டிற்கு வந்து என்னோடு அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றார் என்பதை அவரது அண்ணனும் அண்ணியும் அறிந்து சென்று இருக்கின்றார்கள். இதே ஊரில் உள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணை திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக அவரது அண்ணன் கூட சென்ற சமயம் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று அவரது அண்ணனே தந்தைக்கு தகவல் சொல்லி இருக்கின்றார்.
இரண்டு மணி நேரம் மட்டும் என் இல்லத்திற்கு வந்து என்னை பார்த்த சமயம் நம் இருவரது நடவடிக்கைகளை கவனித்த அவரது அண்ணனுக்கே இந்த நிலைமை என்றால் வருடக் கணக்கில் நான் அவரோடு பழகி வந்ததை உன்னிப்பாக கவனித்து வந்து என்னை கோயில் குளங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று என்னுடன் பழகி என்னுடைய காதலுக்கு ஆதரவு தந்து என்னை எதிர் கால மருமகளாகவே நினைத்து என்னை மருமகளாக அடைய வேண்டும் என்று பலப் பல பூஜைகளில் கலந்து கொண்ட அவரது தாயாரின் நிலைமை எப்படி இருக்கும் என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இன்று அவர் வருகின்ற நாள். இன்று அவர் வரும் சமயம் திருமணம் பற்றி என்ன சொல்லப் போகின்றார் என்று தெரியவில்லை என நினைத்துக் கொண்டிருந்த சமயம் அவர் எனது இல்லத்திற்குள் நுழைந்தார். அது சமயம் என் செல்லப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். அவரது கண்கள் என் குழந்தையை நாடின.
நான் குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்து கொடுக்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு சற்று நேரம் போகட்டும் என்று சொல்லி விட்டு குழந்தை எழுந்தால் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லும் சமயம் அவருக்கு சற்று மன வருத்தமாக இருக்கும் எனவும் மெதுவாக குழந்தையை எழுப்பலாம் என்று சொன்னார். அவரது மனம் மட்டுமா வருத்தப்படும் என் மனம் கூடத் தான் வருத்தப்படும்.
அதன் பின்னர் அவராகவே என்னிடம் பெண் பார்க்கும் விவரம் சொல்ல ஆரம்பித்தார். சென்ற மாதம் அவரது ஜாதகத்துடன் பொருந்தியுள்ள இரண்டு மூன்று பெண்களை அவரும் அவருடைய தந்தையும் அண்ணியுடன் சென்று பார்த்து வந்ததாக தெரிவித்தார்.
பெண் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு பெண் எனக்கு உறவு தான் என்றும் பெண் யார் என்பதனையும் தெரிவித்தார். அப்போது நான் அந்தப் பெண்ணை அவருக்குப் பிடிக்காதே என்று சொல்லி விட்டு நானே அந்தப் பெண் உங்களுக்கு வேண்டாம் என்று சொன்னேன். காரணம் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் சொத்துக்கள் காசு பணம் நிறைய இருந்தாலும் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகளாகவே இருக்கும். மன நிம்மதி இருக்காது என்று சொன்னேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அவரது குரலைக் கேட்டவுடன் என் குழந்தை தூக்கத்திலிருந்து விழித்து விட்டது. தொட்டிலிலிருந்து தொட்டில் துணியினை விலக்கிப் பார்த்து பாபா பாபா என்று சொன்னதைக் கேட்ட அவர் குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்துக் கொண்டு அரவணைத்து முத்தம் கொடுத்தார். வழக்கம் போல் சாக்லெட் பரிசு. குழந்தையின் முகத்தில் அளவிலாத ஆனந்தம். எனக்கும் தான்.
வேறு இரண்டு பெண்கள் பார்த்த விவரம் சொல்லுமாறு கேட்டேன். உடனே என் குழந்தை அவரிடம் பாபா பெண் பார்க்கப் போகாதே. அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னது கேட்டதும் இதற்குத் தான் எழுப்ப வேண்டாம் என்று சொன்னதாக சொன்னார்.
பெண் பார்க்கச் சென்ற இடத்தில் ஒரு வீட்டார் உறவினர்கள் அனைவரும் பார்த்து முடித்த பின்னர் முடிவு சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். அவருடைய தாயாரே இன்னும் பெண் பார்க்கவில்லை. முதலில் அவருக்குப் பிடிக்க வேண்டும் அதற்குப் பின்னர் அவரது தாயாருக்குப் பிடிக்க வேண்டும் என்று இருக்கும் போது பெண்ணின் உறவினர்கள் மாத்திரம் எப்படி முடிவு செய்ய முடியும் என்று நினைத்தேன்.
இன்னுமொரு இடத்தில் பெண் பார்க்கச் செல்வதற்கு முன்னர் மாப்பிள்ளை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று தரகரிடம் சொல்லி அனுப்பி விட்ட காரணத்தால் அவர் இனிமேல் மீண்டும் கல்லூரிக்குச் சென்று பட்டப் படிப்பு படித்து முடித்த பின்னர் அந்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்ததும் மீண்டும் வந்து அதே பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் முடிவு செய்யலாம் என்று திருமண தரகரிடம் சொல்லி விட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
பெண் பார்த்து வந்த விவரம் சொல்லி முடித்தவுடன் எனக்காக நீங்கள் பிறந்து இருக்கின்றீர்கள். அதே போல உங்களுக்காக நான் பிறந்துள்ளேன் என்று நாம் இருவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இறைவன் என் இதயத்தை மாத்திரம் உங்களுக்காகவும் உங்கள் இதயத்தை மாத்திரம் எனக்காகவும் படைத்திருக்கின்றான் என்பது நமக்குத் தெரியாமல் போய் விட்டது.
உங்களுடைய இதயத்தில் இடம் பிடிக்க முடிந்த என்னால் என்னுடைய உடலை உங்களுக்குக் கொடுக்க முடிவில்லை. உங்களிடம் இல்லற சுகம் அனுபவிக்க முடியவில்லை. நம்முடைய எதிர் காலக் கனவுகள் எல்லாம் இரவு நேரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்து என்னை வாட்டி எடுக்கின்றன.
நம் இருவருக்கும் திருமணம் நடந்த பின்னர் நம் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளில் ஆறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று சொல்லும் சமயம் என்னிடத்தில் எவ்வளவு இல்லற சுகத்தை எதிர் பார்த்து இருப்பீர்கள் என்பது கேட்டு நம் காம்பவுண்ட் தோழியர் எனக்கு ஓய்வே கிடையாதா என்று கேட்கும் சமயம் ஓய்வு மற்றும் இடைவெளி உண்டு என்று சொல்வீர்கள். நான் எப்படி என தெரியாமல் கேட்கும் சமயம் ஒரே பிரசவரத்தில் இரட்டைக் குழந்தைகள் என்று சொல்வீர்கள். அப்போது நான் எனக்கு மூன்று பிள்ளைகள் மட்டும் போதும் என்பேன்.
அந்த கால கட்டங்களில் என்னுடைய உயிர் உங்கள் மடியில் பிரிய வேண்டும் உங்களுக்கு மனைவி என்னும் உறவுடன் தீர்க்க சுமங்கலியாக நான் இறைவனடி சேர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நம் பிறப்பிற்குக் காரணமானவர்கள் நம் வாழ்க்கையின் திருப்பத்திற்கும் காரணமாகி விட்டார்கள். என்னால் தினந்தோறும் இரவு நேரங்களில் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான சுவீட் செய்துள்ளேன் என்றவாறே சுவீட்டினை கொடுத்து விட்டு சிற்றுண்டி பரிமாறினேன். அவரும் என் குழந்தையும் சாப்பிட்டார்கள். எனக்கும் ஊட்டி விட்டார்கள். பின்னர் குடிப்பதற்கு குளிர் பானம் கொடுக்கட்டுமா எனக் கேட்ட சமயம் குளிர் பானம் வேண்டாம் என்று கொன்னார். அதன் பின்னர் அவருக்கு காபி கொடுத்து அவர் கொடுத்த பாதியை நான் குடித்தேன்.
அதற்குப் பின்னர் அவராகவே அவரது அலுவலகத் தோழி பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படும் சமயத்தில் அவருக்கு டாக்டர் கொடுக்கும் மாத்திரைகளை முதலில் சாப்பிடுவதாக சொன்ன அந்த கர்நாடகாவைச் சேர்ந்த தொலைக் காட்சியில் வருகின்ற பெண் அவருக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்ற காரணத்தால் அந்தப் பெண்ணின் உறவினரான ஒரு பெண் டாக்டராக இருப்பதால் அவரிடத்தில் இரண்டு பேரும் சேர்ந்து போய் காட்டி வந்ததாகவும் தொண்டையில் சதை வளர்ந்து இருப்பதால் ஆபரேஷம் செய்து கொள்ளுமாறு டாக்டர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அலுவலகத்தில் பணியாற்றும் தோழியர்கள் அனைவரும் இந்த ஊரிலேயே உள்ள ஒரு நல்ல தனியார் மருத்துவ மனையில் ஆபரேஷம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் சமயம் அவரது தாயார் சொந்த ஊருக்கு வந்து ஆபரேஷன் செய்து கொள்ளும் படி சொல்லி இருப்பதாகவும் அனைத்து தோழியரும் அவரது தற்காலிக பிரிவினை தவிர்க்க ஆபரேஷனை அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்து செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு அவரது தோழியர்கள் அனைவரும் சேர்ந்து சொல்லும் காரணம் டான்சில் ஆபரேஷன் செய்து கொண்டு 15 நாட்கள் சொந்த ஊரில் தங்கி விட்டால் அவரது தனிமையை அவர்களால் பொறுக்க முடியாது என்று சொல்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
அவர் எனக்கே சொந்தம் என்று நானும் சொந்தமடி நீ எனக்கு என்று அவரும் இருந்த காலம் போய் இன்று எத்தனை பேர் அவருக்கு நலம் விரும்பிகளாக சொந்தம் கொண்டாடுகின்றார்கள் என்பதனை நினைக்கும் போது நான் என் மனதினை சரியான ஒருவரிடம் தான் பறி சொடுத்துள்ளேன் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக அதாவது அவர் என்னை விரும்புவதாக தெரிவித்த சமயம் நான் ஏற்றுக் கொண்டது சரியான முடிவு என்பதனை தெரிந்து கொண்டேன்.
நான் எப்போது சொந்த ஊர் சென்று ஆபரேஷன் செய்து கொள்ளப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கு அவர் என்னை மாதிரி அவருடன் தற்சமயம் உயிருக்கு உயிராக பழகி வரும் நாற்பதுக்கு மேற்பட்ட தோழியர்களும் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி ஆபரேஷன் செய்து கொள்வது என்பதனை முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
நான் நீங்கள் சொந்த ஊருக்கு ஆபரேஷனுக்கு செல்வதற்கு முன்னர் ஒரு முறை கட்டாயம் என் வீட்டிற்கு வந்து எனக்கு தகவல் சொல்லி விட்டு புறப்பட்டால் நான் ஒரு முறை வேறு ஏதேனும் சாக்குச் சொல்லி ஊருக்கு வந்து உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் தாயாரிடம் பேசி விட்டு வரலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என்று சொன்னேன். அதற்கு அவர் என்னை ஊருக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டு நான் அங்கு சென்று அவரைப் பார்க்கும் சமயம் அவரது தாயார் என்னை மருமகளாக அடைய முடியவில்லை என்று மீண்டும் கண் கலங்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொன்னார்.
இத்தனை நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும் சமயம் விடைபெறும் போது கண்ணீர் விடுவேன். இப்போது ஆபரேஷன் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி விட்டு என்னிடம் விடைபெற்றுச் செல்லும் சமயம் அடுத்த மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை சந்திக்க முடியாது என்பதனை நினைத்து நான் அழுவதைப் பார்த்து என் குழந்தையும் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டது.