மீண்டும் தனிமை
அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் வைராக்கியமாக அரசாங்க வேலையில் சேர்ந்து கொண்டார்.
என் வயதுடைய தோழர்கள் மற்றும் தோழியர்கள் இருந்த காம்பவுண்ட் வீட்டினை காலி செய்து விட்டு சொந்த வீட்டிற்கு குடிபோகிறோம் என்று சொல்லி விட்டு நானும் என்னுடைய தாயாரும் என் தங்கையின் குடும்பத்துடன் தங்கை குடும்பத்தாரின் சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம். எனவே அந்த வீட்டில் இருந்த நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசியது போல் புதிய இடத்தில் பேச முடியவில்லை.
திரும்பத் திரும்ப என்னுடைய தாயார் மற்றும் தங்கை மற்றும் தங்கையின் மூத்த தாரத்து மகள்களுடன் மட்டுமே பேச வேண்டும். என் கூடப் பிறந்த தங்கைக்கு 5 வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகள் மட்டுமே.
அவர் இருந்தால் அவரோடு பேசிக் கொண்டு இருக்கலாம். அந்த வீட்டில் இருந்தால் மற்ற தோழியரோடு பேசிக் கொண்டு இருக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் அவரது தாயாரோடு மட்டுமாவது அன்பாக பேசிக் கொண்டிருக்க முடியும். எனவே எனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எல்லா உறவுகளையும் இழந்து விட்டது போன்ற தனிமை என்னை வாட்டியது.
என்னுடைய தாயாருடனோ அல்லது என்னுடைய தங்கை குடும்பத்தாருடனோ கோயில் குளங்களுக்குச் சென்றால் கூட அவர் கூட வந்து இருந்தால் இங்கு அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இந்த இடத்தில் இவ்வாறு நடந்து கொண்டிருப்போம். இந்த கடையில் இதை வாங்கிக் கொடுத்து இருப்பார் என்பது போன்ற நினைவுகள் தான் வருகின்றதே தவிர என்னால் வழிபாடு செய்ய முடியவில்லை. எனக்கு எந்த ஒரு செயலிலும் விருப்பம் இல்லாமல் ஒரு ஜடம் போல இருந்து வருகின்றேன்.
இந்த நிலையில் ஒரு நாள் என் தாயாரிடம் பழைய காம்பவுண்ட் வீட்டிற்குச் சென்று வருகின்றேன் என்று அனுமதி கேட்டு அங்கு சென்று அவரது தாயாரைப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் அவரது தாயார் சந்தோஷத்துடன் வரவேற்று அருகில் அமரச் சொன்னார்கள். நானும் அமர்ந்து கொண்டேன்.
அந்த சமயம் புதிய வீட்டில் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்பதனை நான் நன்கு அறிவேன். ஏனெனில் உனது குடும்பத்தாரின் நடவடிக்கை மற்றும் போக்கு சரியில்லை என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.. உன்னிடம் ஏதேனும் தகாத வார்த்தைகள் பேசி துன்புறுத்துகின்றார்களா என்று கேட்டார். அதற்கு நான் இதுவரையில் நடக்கவில்லை என்று தெரிவித்தேன்.
உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் என்னிடத்திலும் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் வேலைக்கு விண்ணப்பித்து பரிட்சை எழுதி தேர்வாகி வெளியூர் சென்றது எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது.
எனக்கே இப்படி இருக்கின்றது என்றால் உன்னுடைய நிலை எப்படி இருக்கும் என்பதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று சொல்லி என்னைத் தேற்றினார்கள்.
அப்போது அவரது தாயார் ஏதேனும் கோயிலுக்குச் சென்று வருவோமா என்று கேட்டார்கள். அதற்கு நான் என்னால் எங்கு சென்றாலும் கடவுளை தரிசனம் செய்ய முடியவில்லை.
காரணம் அவர் கூட எல்லா கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து வந்த படியால் எங்கு போனாலும் அவருடைய நினைவு என்னை வாட்டுகின்றது. எனவே நான் தற்போது அவர் இல்லாமல் தனியாக கோயிலுக்குச் செல்வது என்றாலே வெறுப்பாக இருக்கின்றது என்று சொன்னேன்.
கோயிலுக்கு உள்ளே செல்லுமுன்னரே வழியில் சாப்பிட்டு விட்டுச் சென்றால் தான் சற்று நேரம் பசியை மறந்து கடவுளை நன்றாக வழிபட முடியும். அதே போல கோயிலுக்குள் உள்ள கடவுளை பசியுடன் தரிசனம் செய்யக் கூடாது.
பட்டினி கிடந்து சாமி தரிசனம் செய்ய எந்த பக்தரும் வந்து கஷ்டப்படக் கூடாது என்பதனை அறிவுறுத்தவே கடவுள் ஆறு கால பூகைகளையும் பெற்றுக் கொண்டு ஐந்து வேளை நைவேத்தியத்தினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று இதுவரையில் யாருமே சொல்லாத விளக்கத்தினைச் சொல்லுவார்.
அதே போல கோயில் வாசலில் விற்கும் மலர்களை வாங்கிக் கொடுத்து நான் தலையில் சூடிய பின்னர் தான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வார் என்று அவருடைய தாயாரிடம் நான் சொன்னேன். அப்போது நான் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.
நானும் அவரும் திருமண வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குச் சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து சந்தோஷமாக இருந்தோம்.
இப்போது அது முடியவில்லை என்பதால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இரவு முழுவதும் தூங்காமல் அவரை நினைத்து நான் அழுது கொண்டிருக்கின்றேன் என்று அவரது தாயாரிடம் சொன்னேன். அதனைக் கேட்ட அவரால் எதுவும் பேச முடியவில்லை.
பட்டினி கிடந்து சாமி தரிசனம் செய்ய எந்த பக்தரும் வந்து கஷ்டப்படக் கூடாது என்பதனை அறிவுறுத்தவே கடவுள் ஆறு கால பூகைகளையும் பெற்றுக் கொண்டு ஐந்து வேளை நைவேத்தியத்தினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று இதுவரையில் யாருமே சொல்லாத விளக்கத்தினைச் சொல்லுவார்.
அதே போல கோயில் வாசலில் விற்கும் மலர்களை வாங்கிக் கொடுத்து நான் தலையில் சூடிய பின்னர் தான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வார் என்று அவருடைய தாயாரிடம் நான் சொன்னேன். அப்போது நான் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.
நானும் அவரும் திருமண வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குச் சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து சந்தோஷமாக இருந்தோம்.
இப்போது அது முடியவில்லை என்பதால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இரவு முழுவதும் தூங்காமல் அவரை நினைத்து நான் அழுது கொண்டிருக்கின்றேன் என்று அவரது தாயாரிடம் சொன்னேன். அதனைக் கேட்ட அவரால் எதுவும் பேச முடியவில்லை.
அதன் பின்னர் நான் அவருடைய தாயாரிடம் புதிதாக வேலையில் சேர்ந்த விவரம் பற்றிக் கேட்டேன்.
புதிதாக என் மகன் வேலைக்குச் செல்லும் சமயம் கூடச் சென்ற அவரது தந்தை அங்குள்ள அதிகாரியிடம் எனக்கு வீட்டில் ஒத்தாசையாக இருக்கும் சமயம் எனக்கு மாதாமாதம் ரூபாய் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையில் கூடுதலாக அவனால் வருமானம் கிடைத்தது. இந்த வேலையில் சேர்ந்தால் மாதச் சம்பளம் எவ்வளவு என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அங்குள்ள அதிகாரி மாதாந்திர சம்பளம் இவ்வளவு என்றும் வீட்டு வாடகைப் படி மற்றும் பஞ்சப்படி எல்லாம் சேர்த்து மொத்தம் இவ்வளவு வரும் என்று சொல்லியிருக்கின்றார். அதைக் கேட்ட அவரது தந்தை உடனே அவனை வேலையிலிருந்து நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். இவ்வளவு குறைந்த சம்பளத்தில் அவன் வேலை செய்ய மாட்டான் என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த அதிகாரி இப்போது கிடைத்திருப்பது நிரந்தர வேலை. அவருக்கு 55 வயது ஆகும் வரையில் சம்பளம் கூடிக் கொண்டே போகும். 55 வது வயதில் ஓய்வு பெற்ற பின்னர் அவர் இறக்கும் வரை மாதாந்திர பென்சன் கிடைக்கும். நீங்கள் சொல்வது போல எல்லாம் செய்ய முடியாது என்று விரட்டி அனுப்பியிருக்கின்றார்.
அதன் பின்னர் இங்கு வந்து என்னிடம் கோபித்துக் கொண்டு இருக்கின்றார் என்று சொன்னார்கள்.
அரை வயிற்றுக் கஞ்சி என்றாலும் சொந்த உழைப்பில் தான் உன்னுடன் சேர்ந்து அவன் உண்ண வேண்டும் என்னும் வைராக்கியத்துடனும் உன்னை மணந்தே தீறுவது என்னும் வெறியுடனும் இருக்கின்றான். எனவே உன்னை அவனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னதைக் கேட்ட எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அவனிடமிருந்து கடிதம் கூட வருவதில்லை. நான் அவரிடம் பல முறை கெஞ்சிக் கூத்தாடி கடிதம் எழுதினால் கூட பதில் வருவதில்லை. அவ்வளவு வெறுப்பில் இருக்கின்றான்.
முடிவாக அவனை விநாயக சதுர்த்தி விடுமுறையில் கட்டாயம் வருமாறு அழைப்பதாக இருக்கின்றேன் என்று மிகுந்த மனக் கவலையுடன் தெரிவித்தார்கள். இதன் பின்னர் நான் என்னுடைய இல்லத்திற்கு திரும்பினேன்.
என்னுடைய இல்லத்திற்குத் திரும்பிய பின்னர் என்னுடைய தாயார் அவருடைய வீட்டில் நடந்தவற்றை எப்படியோ அறிந்து கொண்டு என்னை மீண்டும் எங்காவது அனுப்ப திட்டமிட்டார்கள்.
எனக்கும் அவர் இல்லாமல் உள்ளுரில் இருக்கப் பிடிக்கவில்லை. என் தாயாரும் என் மீது கோபமாக இருந்தார்கள்.
இதற்கு இடையில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவோம் என்று என்னை அழைத்துச் சென்று அவர்களிடத்தில் எனக்கும் அவருக்கும் உள்ள நெருக்கமான உறவினை தெரிவித்து சில காலம் என்னை அங்கேயே வைத்துக் கொண்டு பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அங்கேயே விட்டு விட்டு திரும்பி விட்டார்கள்.
வெளியூரில் உள்ள என் உறவினர் வீட்டில் வீட்டுக் காவலில் இருக்கும் சமயம் என் எண்ணங்கள் எல்லாம் அவரை அவரது தாயார் விநாயக சதுர்த்திக்கு வரவைப்பார்கள். அப்போது சென்று அவரைக் கண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என தீர்மானிக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது.
ஆனால் அவர் விநாயக சதுர்த்தி வரை கூட காத்திராமல் சம்பளம் கிடைத்தவுடன் ஊருக்கு வந்து அவரது தந்தையிடம் என்னை மணமுடித்து வைக்குமாறு கேட்டு அவரது தந்தை மறுத்து விடவே மிகுந்த மன வேதனையுடன் அவரது தாயாரிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டு உடனே திரும்பி விட்டார் என்னும் செய்தியினை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
இதற்குப் பின்னர் என்ன செய்வது அவரது தந்தை ஒப்புக் கொள்ளாத நிலையில் என்னை நிச்சயம் அவர் கைவிட மாட்டார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவரது தந்தையின் விருப்பத்தையும் மீறி என்னை அவர் பெற்றோர் விருப்பம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள விருப்பப் பட்டால் என்ன செய்வது என்னும் கவலையுடன் நான் பல நாட்கள் தூங்கவில்லை.
இதற்குப் பின்னர் என்ன செய்வது அவரது தந்தை ஒப்புக் கொள்ளாத நிலையில் என்னை நிச்சயம் அவர் கைவிட மாட்டார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவரது தந்தையின் விருப்பத்தையும் மீறி என்னை அவர் பெற்றோர் விருப்பம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள விருப்பப் பட்டால் என்ன செய்வது என்னும் கவலையுடன் நான் பல நாட்கள் தூங்கவில்லை.
அப்போது விநாயக சதுர்த்திக்கு வருமாறு அழைக்கப் போவதாக அவரது தாயார் சொன்னது ஞாபகத்தில் இருந்தது. எனவே அந்த நேரத்தில் சென்றால் அவரைப் பார்க்க முடியும் என்று திட்டமிட்டேன். அது போல ஊருக்கும் போய் விட்டேன். ஆனால் என்னுடைய தாயார் என்னை வீட்டில் தங்க விடாமல் வேறு ஒரு இடத்தில்; ரகசியமாக வைத்து இருந்தார்கள்.
இந்த விவரத்தை அவர் நண்பர் மூலம் தெரிந்து கொண்டு விநாயக சதுர்த்தி பண்டிகைக்கு விடுமுறை கிடைத்தும் ஊருக்கு வருவதை நிறுத்திக் கொண்டு விட்டார். அதனால் அவரது தாயாருக்கு மிகுந்த மனவருத்தம். எனக்கும் தான்.