சரியான மணமகள் தேர்வு செய்ய ஆலோசனை
அவருடன் பணியாற்றும் நண்பர் கற்றுக் கொடுத்த கோகோ காபியினை தயார் செய்து கொடுத்து அவர் என்னை பாராட்டியதும் அதற்குப் பின்னர் அவரது நண்பர் தொலைக் காட்சியில் இதுவரையிலும் இதற்குப் பின்னரும் தொகுத்து வழங்கப் போகும் சமையல் கலை வீடியோ கேசட்டினை அவர் கைகளால் பெற்ற சமயம் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
அதே சமயம் நான் அவர் வரும் சமயம் மாத்திரம் ஆழகாக ஆடைகள் அணிந்து அலங்கரித்துக் கொள்வது சரியல்ல என்னும் அறிவுறையினையும் மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். அவர் என்ன சொன்னாலும் சரியாகத் தான் இருக்கும்.
என் செல்லப் பெண் அனைவரையும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். தற்போது நடக்கவும் ஆரம்பித்து இருக்கின்றாள். புதியவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்து விட்டால் என்னிடத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பாள். அழைத்தாலும் செல்ல மாட்டாள். ஆனால் அவரிடத்தில் மாத்திரம் விதி விலக்கு.
அவர் வந்து விட்டால் போதும் உடனே அவரிடத்தில் போய் அவரது மடியில் அமர்ந்து கொள்வாள். அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். அவர் கொண்டு வரும் சாக்லெட் எனக்கு கிடைப்பதற்கு முன்னர் அவள் பெற்றுக் கொள்வாள். வழக்கம் போல் அவர் பாதி கொடுக்கும் சமயம் அம்மாவுக்கு முழுசா சாக்லெட் கொடுக்காதே எனக்கு கிடைக்காது என்று மழலையில் பேசுவாள். ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் மறு பக்கம் சந்தோஷமாக இருக்கும்.
அவர் வந்தவுடன் அவர் மடியில் அமர்ந்து கொண்டு என்னிடம் பாபாவுக்கு காபி கொண்டு வந்து கொடு என்று சொல்லும் அளவிற்கு அவள் அவரிடத்தில் உரிமை கொண்டாடுவாள். அந்த அளவிற்கு நெருக்கம். நான் காபி கொடுப்பதையும் அதில் அவர் பாதி குடித்து விட்டு மீதியை நான் குடிப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். அதே போல அவரும் என் குழந்தையுடன் ஒரே டம்ளரில் காபியோ அல்லது பாலோ குடித்து இரண்டு பேரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவருக்கு மாத்திரம் மாறி மாறி முத்த மழை பொழிவாள்.
அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேசினால் நம்மைப் பற்றி மட்டும் பேசலாமே என்று சொல்வார். திருமணத்தைப் பற்றிக் கேட்டால் அது அவரது மனதினை புண்படுத்துவதாக இருக்கும். சரி ஏதாவது பேசலாம் என்று தீர்மானித்தேன்.
எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. எனக்கு முதலாவாதாக ஆண் குழந்தை பிறந்து இருந்தால் உங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கு மணமுடித்து வைத்து அவர்களாவது சந்தோஷமாக நாம் அனுபவிக்க முடியாததை அவர்கள் அனுபவித்து நமது கண்முன் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்த்து சந்தோஷப் பட்டிருக்கலாம்.
அது மட்டுமல்லாது சம்மந்தி வீடு என்னும் உரிமையுடன் என்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரைக்கும் உங்கள் வீட்டிற்கு மகளைப் பார்க்க வருகின்றேன் என்று சாக்குச் சொல்லி வந்து சென்று கொண்டு இருக்கலாம். நீங்களும் சம்மந்தி வீடு என்னும் உரிமையுடன் என்னுடைய வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வந்து சென்று கொண்டிருக்கலாம். நமக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த பின்னர் நான் ஒரு பெண் குழந்தை பெற்று திருமணம் முடிக்கலாமே என்று சொன்னார். அப்படியானால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
அவருடைய திருமண பேச்சினை அவரிடத்தில் எப்படியெல்லாம் ஆரம்பிக்க வேண்டி இருக்கின்றது என்பதனை அவர் நன்கு புரிந்து கொண்டார். அதன் பின்னர் அவராகவே அவரது திருமணதிற்காக பெண் பார்க்கும் நிலை பற்றி விளக்க ஆரம்பித்தார்.
அவருடைய தந்தை ஜாதகப் பொருத்தம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் வரப் போகும் மணப்பெண் வீட்டாரிடம் சொத்துக்கள் இருக்கின்றனவா என்றும் பெண்ணுக்கு எவ்வளவு நகைகள் போடுவார்கள் என்றும் பெண் வீட்டாரின் வருமானம் மற்றும் அந்தஸ்து பற்றியும் பெண்ணுக்கு தாய் மற்றும் தந்தை இருப்பதோடு மட்டுமல்லாமல் அண்ணன் தம்பிகள் கூட இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்து அதன் படி தேர்வு செய்த பின்னர் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு அவரது தாயாரை அழைத்துச் செல்வதாக தெரிவித்தார்.
என்னைத் தன்னுடைய வருங்கால மருமகளாகவே தீர்மானித்து அதன் படி என்னுடன் மிக மிக நெருக்கமாக அவருடைய தாயார் பழகி விட்ட படியால் வரப்போகும் பெண் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி வருவதாக தெரிவித்தார்கள்;.
எனவே ஜாதகப் பொருத்தம் அந்தஸ்து மற்றும் சொத்து சுகம் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவரது மகன் விரும்பியது போன்ற அழகான மற்றும் அடக்கமான பண்பான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி அவரது தந்தை அதனை ஏற்க மறுத்து விட்ட காரணத்தால் இனிமேல் அவனுக்கு பெண் பார்க்க நான் வர மாட்டேன் என்று அவருடைய தாயார் பெண் பார்ப்பதற்கு செல்வதில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவருடைய தாயார் இதே ஊரில் இருக்கும் அவர்களது மகன் மற்றும் மருமகளிடம் அவருடன் எனது வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து விட்டு திரும்பிய பின்னர் என்னைப் போன்றே பெண் இருந்தால் மட்டுமே தான் பெண் பார்க்க வருவேன் என்று கட்டாயமாக சொல்லி விட்டார் என்னும் காரணத்தால் அநேகமாக அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று அவர் அவருடைய அண்ணன் மற்றும் அண்ணியுடன் இங்கு வந்து என்னை காண்பிக்கப் போவதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் எனது கட்டாயத் திருமணத்திற்கு முன்னர் நடந்திருந்தால் நானும் அவரும் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியாக சந்தோஷமாக இருந்திருப்போம்;. அவருடைய தாயாரும் மன மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது வந்து அவர்கள் என்னைப் பார்ப்பதால் என்னைப் பொறுத்த வரையில் எந்த பலனும் இல்லை.
இதற்குப் பின்னர் சற்று நேரம் என்னிடம் பேசி விட்டு அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று அண்ணன் மற்றும் அண்ணியுடன் வருவதாக சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டுச் செல்லும் சமயம் ஒரு பக்கம் பிரிவினைத் தாங்க முடியாத துயரம் மறு பக்கம் அவர் அடுத்த வாரம் மிகக் குறுகிய இடைவெளியில் மீண்டும் வரப் போகிறார் என்னும் சந்தோஷம்.
அவர் சொல்லிச் சென்றவாறு அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று பிற்பகல் என்னுடைய இல்லத்திற்கு அவரும் அவருடைய அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோரும் வந்து சேர்ந்தனர். அவர் வரப் போகிறார் என்ற காரணத்தால் எனக்கு குழந்தை பிறந்த போது அவர் வாங்கிக் கொடுத்த புடவையினைக் கட்டிக் கொண்டு இருந்தேன். அவர் வந்தவுடன் என் குழந்தை பாபா வந்துட்டார் என்று சொல்லி அவரிடம் ஒட்டிக் கொண்டது.
அவருடைய அண்ணிக்கு என்னை நன்றாகத் தெரியும். நமக்குள் இருந்து வந்த நெருக்கமான உறவு பற்றியும் தெரியும். ஆனால் அவருடைய அண்ணனுக்கு நமது காதல் விஷயம் எதுவும் தெரியாது.
அந்த நேரத்தில் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் வீட்டில் இருந்தார். அவர்கள் மூவரும் வந்தவுடன் அமர்ந்த பின்னர் என்ன விஷயமாக வந்துள்ளீர்கள் எனக் கேட்க உடனே அவரது அண்ணன் இந்த பகுதியில் ஏதேனும் வீடு கிடைக்குமா எனப் பார்க்க வந்துள்ளோம் என்று சொன்னார். அதனைக் கேட்டவுடன் என்னுடைய நண்பரின் வீடு காலியாக இருந்தது அதனைப் பார்த்து விட்டு வருகின்றேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்.
உடனே அவரது அண்ணி வீடு கிடைத்து விட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று கேட்க நான் இவர் வந்து விட்டால் ஏதாவது சாக்குச் சொல்லி விட்டு வெளியே புறப்பட்டுச் சென்று விடுவார் என்றும் நீண்ட நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார் என்றும் எதற்கும் கவலைப் பட வேண்டாம் என்றும் சொன்னேன்.
அவர் மடியில் அமர்ந்துள்ள என் குழந்தையை அவருடைய அண்ணனும் அண்ணியும் அழைத்துப் பார்த்தார்கள். செல்லவில்லை. உடனே என்னிடத்தில் குழந்தையை கொடுக்குமாறு கேட்டார்கள். அதற்கு நான் இவர் வந்து விட்டால் என் குழந்தை என்னிடமே வராது அப்படி இருக்கையில் நான் எப்படி பெற்றுத் தர முடியும் என்றவாறே என் குழந்தையை அழைத்தேன். என்னிடம் வர என் குழந்தை மறுத்து விட்டது.
அதன் பின்னர் அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் அவரது தாயார் இங்கு வந்திருந்த சமயம் என்னைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய பின்னர் சுமார் 15 நாட்கள் உடல் நலமின்றி இருந்ததாகவும் அதன் பின்னர் சொந்த ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தனர். அப்போது அவரது தாயார் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் அவருக்கும் அவருடைய அண்ணன் அண்ணிக்கும் சிற்றுண்டி கொடுத்த போது என் மழலைக் குழந்தை எனக்கும் அவருக்கும் தன் பிஞ்சுக் கரங்களால் ஊட்டி விட்டது. அந்த காரணத்தால் நானும் அவரும் ஒரே தட்டில் உள்ள சிற்றுண்டியை குழந்தையுடன் சாப்பிட்டோம்.
அதற்குப் பின்னர் குளிர் பானம் கொடுத்தேன். அவரது அண்ணனும் அண்ணியும் குளிர் பானம் அருந்தினார்கள். அப்போது அவர் குளிர் பானம் குடித்துக் கொண்டிருந்த சமயம் குழந்தை அம்மாவுக்கு பாதி கொடு என்று சொன்னதன் படி அவர்; பாதி குளிர் பானத்தை என்னிடத்தில் கொடுத்தார்.
அதனைக் கண்ட அவரது அண்ணி ஒரு குளிர் பானத்தைக் கூட இவ்வளவு ஒற்றுமையாக பகிர்ந்து குடிக்கின்றார்கள். அதனை அந்த பிஞ்சுக் குழந்தை கூட ஆமோதிக்கின்றது. ஆனால் அவரது அண்ணன் அண்ணிக்கு திருமணம் நடந்து நான்கு குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட இவ்வாறான நெருக்கத்துடன் கூடிய ஒற்றுமை கிடையாது என்று சொல்லி வருத்தப் பட்டார்கள்.
அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட இது வரையில் உணவினையோ அல்லது பானத்தையோ பகிர்ந்து கொள்ளவில்லை என்பதனையும் நாம் இருவரும் காதல் தோல்வி ஏற்பட்டு பிரிந்த பின்னரும் கூட எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதனையும் அறிந்து வரத்தான் அவரது தாயார் என்னைப் பார்த்து விட்டு எனக்கும் அவருக்கும் இடையே எவ்வளவு நெருக்கம் இருக்கின்றது என்பதனை தெரிந்து கொள்ளவும் அதே போன்ற வகையில் இவருக்கு பெண் பார்ப்பதை அறிந்து கொள்ளவும் தான் இங்கு அனுப்பி இருக்கின்றார்கள் என்;று சொன்னேன்.
உடனே அவரது அண்ணி என்னிடத்தில் இவ்வளவு அன்யோன்யமாக பழகிய பின்னர் எவ்வளவு தான் அழகான மற்றும் அடக்கமான பெண்களைப் பார்த்தாலும் அவருக்கும் அவரது தாயாருக்கும் பிடிப்பதில்லை என்று சொன்னார்கள். அதன் பின்னர் அவருக்கு எந்த எந்த இடங்களிலெல்லாம் பெண் பார்த்தார்கள் என்பதனையும் அவருடைய தாயாருக்கு பெண்கள் பிடிக்காத காரணத்தையும் விளக்கமாக சொன்னார்கள்.
அதே நேரத்தில் ஆரம்பத்தில் அவர் குழந்தையாக இருக்கும் சமயம் ஒரே வீட்டில் குடியிருந்ததாகச் சொன்ன அந்தப் பெண்ணைப் பார்த்து அந்தப் பெண்ணை மாத்திரம் அவரும் அவருடைய தாயாரும் சரியென சொன்ன பின்னர் மேற்கொண்டு நகைகள் எதிர்பார்த்த காரணத்தாலும் இரண்டு பேருக்கும் வெறும் மூன்று மாதங்கள் தான் வயது வித்தியாசம் இருந்த காரணத்தாம் அந்த சம்மந்தம் முடியவில்லை என்றும் சொன்னார்கள். உடனே நான் இந்த விவரத்தை ஏற்கனவே என்னிடம் தெரிவித்து விட்டார் எனச் சொன்னேன்.
அவருடைய அண்ணியின் நெருக்கமான உறவுகளில் அவருக்குப் பிடிக்கும் வகையில் அழகான பெண்கள் இருந்தாலும் கூட ஜாதகப் பொருத்தம் மற்றும் ஒரே குடும்பத்தில் பெண் எடுக்க விரும்பம்; இல்லாத காரணத்தால் பெண் பார்க்க முடியவில்லை என்றும் சொல்லி வருத்தப் பட்டார்கள்.
நான் அவரிடத்தில் என்னைப் போன்றே அழகான அடக்கமான அன்யோயமான் பெண்கள் இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் என்று வரும் சமயம் ஒத்து வராது. அவரது தந்தை என்னை ஜாதகப் பொருத்தம் சரியில்லை அவருக்கு ஏற்ற அளவில் அந்தஸ்து இல்லை என்று நிராகரித்த சமயம் அவர் என்னவெல்லாம் சொல்லி அவரது தந்தையிடம் சண்டை போட்டார் என்பதனை எல்லாம் விளக்கினேன்.
அவரது தாயார் என்னை மருமகளாக அடைய வேண்டும் என்று எவ்வாறெல்லாம் மனக் கோட்டை கட்டியிருந்தார்கள் என்றும் எப்படியெல்லாம் கவனித்துக் கொண்டார்கள் என்றும் விளக்கினேன். எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்து நான் மருமகளாக வலது காலை எடுத்து வைத்து அவரது வீட்டிற்கு வரவேண்டும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்பதற்காக அவரது தாயாரே நம் இருவருடன் சேர்ந்து என்னென்ன பூஜைகளில் கலந்து கொண்டார்கள் என்பது பற்றியும் விளக்கினேன்.
எனக்கு என்னுடைய தாயார் கட்டாயத் திருமணம் செய்து வைத்து இந்த ஊருக்கு வந்த பின்னர் எனக்கு திருமணம் நடந்தது கூட தெரியாமல் என்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வந்து இந்த ஊரில் தனிக் குடித்தனம் வைப்பதற்காக வீடு பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் தான் இவரை மீண்டும் இங்கு சந்தித்தேன்.
அது வரையில் எனக்குத் திருமணம் ஆகி விட்டது என்னும் விவரம் கூட இவருக்குத் தெரியாது. அன்றைய தினம் இருவரும் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுததோடு சரி. அடிக்கடி என்னைப் பார்க்க எனது இல்லத்திற்கு வரவேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டேன். வேறு எதுவும் பேச இருவராலும் முடியவில்லை.
அந்தச் சமயத்தில் இவர் எனக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை எப்படி அணிந்துள்ளேன் என்பதை பாருங்கள் என்று சொல்லி காட்டிய பின்னரே இவர் என் பக்கம் திரும்பி பார்த்தார். அது வரையில் என் மீது மிகுந்த கோபத்துடன் இருந்தார். நான் ஆலிலைக் கிருஷணன் டாலரை அணிந்துள்ள விதம் கண்ட பின்னர் தான் என் ;மீது இருந்த கோபம் சற்று குறைந்து சாந்தம் அடைந்தார் எனக் கூறி நான் அணிந்துள்ள ஆலிலைக் கிருஷ்ணன் டாலரைக் காண்பித்து திருமணத்திற்கு முன்னர் சிகப்பு கயிற்றில் மறைவாக இருந்தது திருமணத்திற்குப் பின்னர் தாலிச் சரடில் சொரை மற்றும் பொட்டுகளுடன் தாலிக்கு உண்டான மரியாதையுடன் இருக்கின்றது என்று சொன்னேன்.
இவர் இந்த டாலரை வாங்கிக் கொடுத்த நாள் முதல் இன்று வரையில் இவர் நலம் வேண்டி என்னைத் தொட்டுத் தாலி கட்டியது போல கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன் என்று சொன்னேன். இந்த விவரத்தை சென்ற முறை அத்தை வந்திருந்த சமயம் எடுத்துச் கொன்னேன். அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் அதனைப் பார்த்து ஆச்சர்யப் பட்டார்கள்.
என்னுடைய திருமணம் மிக மிக குறுகிய காலத்தில் இவரது தந்தையின் ரகசிய ஆலோசனைகளின் படி நடந்தது. என்னை இவரிடமிருந்து பிரிக்க இவரது தந்தை உடந்தையாக இருந்து கொண்டு எனது தாயாருடன் சதி ஆலோசனைகள் செய்தார்கள் என்பதனை நினைக்கும் போது நம் இருவருக்கும் அவர்கள் மீது கோபமும் வெறுப்பும் தான் ஏற்படுகின்றது.
அதன் பின்னர் இவரது அலுவலக தோழி ஒருத்தியின் அறிவுறைகளின் படி என்னைக் காண இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையினை ஒதுக்கியுள்ளார். ஒரு மாதம் இவர் என்னைக் காண வராவிட்டால் என்னைப் பார்ப்பது மிகவும் அலங்கோலமாக பரிதாபமாக இருக்கும் என்று சொன்னேன்.
அவரது அண்ணன் மற்றும் அண்ணியிடம் எனக்குத் திருமணம் ஆகி விட்டது குழந்தை கூட பிறந்து விட்டது என்ற போதும் கூட இவர் மீது நான் கொண்டுள்ள காதல் மட்டும் இம்மியளவும் கூட குறையவில்லை. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று இவர் என்னைக் காண வரவில்லையெனில் இவருக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என்று என் இதயம் துடிக்கின்றது. நான் தனிமையில் அழ ஆரம்பித்து விடுவேன். அந்த அழுகை அவரைப் பார்த்தவுடன் தான் நிற்கும்.
இவருக்கு உடல் நலமில்லாத நேரத்தில் இவருடைய அலுவலக தோழிகள் இவருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து கவனித்துக் கொள்கின்றார்கள். என்னைவிட அழகான படித்த பெண்கள் இவர் மீது தனி அக்கரை செலுத்துகின்றார்கள் என்று இவர் சொல்ல நான் கேட்கும் சமயம் எங்கே இவர் என்னை மறந்து விடுவாரோ என்னும் நினைப்பு ஏற்படுகின்றது. எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னரும் கூட என் மீது இவர் தொடாந்து அன்பு செலுத்த வேண்டும் என்னும் பேராசை குறையவில்லை.
நான் மட்டும் இவரை எதிர்பார்த்து ஏங்குவது போய் இப்பொழுது என் குழந்தையும் சேர்ந்து கொண்டது. முதல் முறையாக இவர் முகத்தை பார்த்து தான் சிரித்தது. முதல் முறையாக இவர் பேசக் கற்றுக் கொடுத்த பின்னர் தான் பாபா என்று சொல்ல ஆரம்பித்தது. இவர் வந்து விட்டால் என் குழந்தை இவரிடத்தில் மாத்திரம் ஒட்டிக் கொள்ளும். என்னிடம் கூட வராத அளவிற்கு இருவருக்கும் இடையே அன்பு மற்றும் பாசம்.
இந்தக் குழந்தையினை நான் என் வயிற்றில் சுமக்கும் பொழுதே நாங்கள் இருவரும் சேர்ந்து இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என தீர்மானித்து விட்டோம். அதன் படி ஆண் குழந்தையாக இருந்தால் விஜயன் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் விஜயலெட்சுமி என்றும் பெயர் சூட்டுவது என்றும் சுருக்கமாக விஜி என்று அழைப்பது என்றும் முடிவு செய்தோம். பெயர் சூட்டு விழா கூட நடை பெறாத காரணத்தால் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் குழந்தையின் காதுகளில் விஜி என்று மூன்று முறை சொல்லி பெயர் வைத்தோம் என்று சொன்னேன்.
இந்த குழந்தை சொந்த தந்தையிடம் கூட இந்த அளவிற்கு அன்பாகப் பழகுவதில்லை. இவர் வந்து விட்டால் இவர் செல்லும் வரையில் இவரது மடியிலேயே இருக்கும். நான் அழைத்தால் கூட வராது என்று சொன்னேன். அந்த நேரத்தில் அவரது அண்ணியார் குழந்தையை ஒரே ஒரு முறை தன்னிடம் பெற்றுத் தருமாறு கேட்க நான் அழைத்தும் கூட வர மறுத்து விட்டது. அதன் பின்னர் அவருடைய அண்ணி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு குழந்தையைப் பெற்று கொஞ்சினார்கள். மீண்டும் உடனே குழந்தை அவர் மடிக்கு போய் விட்டது.
அந்த நேரத்தில் அவரிடமும் என்னிடமும் இவ்வளவு நெருக்கமாக நீங்கள் இருக்கும் சமயம் வேறு யாரையும் இந்த அளவிற்கு எதிர் பார்க்க முடியாது என்று சொன்னார்கள். நான் மட்டும் அவர் மீது பாசம் காட்டவில்லை. என் குழந்தையும் சேர்ந்து கொண்டது.
அவருடன் வந்த அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் புறப்படலாம் என்று சொன்ன சமயம் அவரை விட்டு பிரிய என் குழந்தைக்கு விருப்பமில்லை. நீங்கள் மட்டும் போங்கள் பாபா இங்கேயே இருக்கட்டும் என்று மழலை மொழியில் சொன்னது. வேறு வழியில்லாமல் கையில் ஒரு சாக்லெட் கொடுத்து விட்டு நிறைய சாக்லெட் வாங்கி வர கடைக்கு செல்வதாக சொன்ன பின்னர் குழந்தை என்னிடம் வந்தது.
அதன் பின்னர் அவர் என்னிடத்தில் சென்று வருகிறேன் என்று சொன்ன அடுத்த விநாடியில் நான் அழ ஆரம்பித்து விட்டேன். அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவராலும் நான் படும் கஷ்டத்தைப் பார்க்க முடியாமல் கலங்கினர். சந்தோஷமாக வந்த அவரது அண்ணன் அண்ணி இருவரும் மிக்க கவலையுடன் என்னிடம் விடை பெற்றுச் செல்லும் சமயம் தான் நம் இருவரது உண்மையான அன்பு பாசம் காதல் நமக்குள் இருக்கும் நெருக்கம் அவர்களுக்குத் தெரிய வந்தது.
எனது கண்களில் நீர் பொங்க அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்றுச் செல்வதை என் குழந்தை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.