காதலர் திருமணம் என்பது தாங்க முடியாத சோகம்
என்னுடைய இல்லத்திற்கு வந்து திருமணத்திற்காக சொந்த ஊருக்குச் செல்லவிருப்பதை தெவித்து விட்டுச் சென்ற பினனர் எனக்கு நாட்கள் சற்று சோகங்களாகவே கழிந்தன.
தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. நான் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் முடித்தவுடன் என் கணவரை எழுப்பிப் பார்த்தேன். அவருக்கு தீபாவளியினை முன்னிட்டு முதல் நாள் இரவு அவரது நண்பர்களுடன் கொண்டாடிய பார்ட்டியின் போதை தெளியவில்லை. அவரை எதிர்பார்த்தால் தீபாவளியினை மாலையில் தான் கொண்டாட முடியும்.
எனவே எனக்காகவும் என் மகளுக்காகவும் அவர் வாங்கி வந்து அன்புடன் கொடுத்த பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த புடவை மற்றும் ரெடிமேட் ஆடைகளை நானும் என் மகளும் உடுத்திக் கொண்டோம்.
அவர் கூடுதலihக வாங்கிக் கொடுத்து இருந்து ரவிக்கையினை மட்டும் மாற்றிக் கொண்டு கண்ணாடி முன்னின்று பார்த்தேன். ஏறக்குறைய அது கூரைப் புடவையின் நிறத்தை ஒட்டி இருந்ததால் ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் கூரைப் புடவையுடன் அவர் அருகில் அமர முடியவில்லை என்னும் கவலை என்ளைத் கவ்விக் கொண்டது.
கோயிலில் சித்தர் சொன்ன வார்த்தை அதாவது தொடவும் முடியாது விடவும் முடியாது என்பதனை எண்ணிப் பார்த்தேன்.
ஆமாம் புடிச்சது கிடைக்காது. கிடைச்சது புடிக்காது என்று சொன்ன வார்த்தைகளின் படி எனக்குப் பிடிச்சது கிடைக்கவில்லை. அதே போல எனக்குக் கிடைத்தது புடிக்கவில்லை. அவரை நான் தொட முடியாவிட்டாலும் என் இதயத்திலிருந்து அவரை விட முடியவில்லை.
திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு அருள்வாக்கு சொல்லும் முன்பின் தெரியாத ஒருவருக்கு கடந்த காலத்தைப் பற்றியும் நிகழ் காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஏழெட்டு வார்த்தைகளில் இவ்வளவு சுறுக்கமாக சொல்ல முடிகின்றதென்றால் அது தான் தெய்வ வாக்கு.
என் விரலை மாத்திரம் தொட்ட காரணத்தால் அவர் பாட்டிலைத் தொடவில்லை சிகரட்டைத் தொடவில்லை ஏன் வெற்றிலை பாக்கினைக் கூட தொடுவதில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக என்னுடைய வாழ்க்கைத் துணை அமைந்து விட்டது. மனக் கோடடை கட்டியது ஒரு மாதிரி நிஜ வாழ்க்கை அமைந்தது வேறு மாதிரி.
தீபாவளிக்கு அவர் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்ட போதிலும் இந்த தீபாவளித் திருநாள் தான் அவரை என்னிடமிருந்து பிரித்தது என்பது எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. அது போலத் தான் அவருக்கும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.
என் குழந்தை தன்னுடைய அப்பாவை பல முறை எழுப்பிப் பார்த்து கடைசியில் அவர் எழுந்த நேரத்தில் நான் எனக்கு நிகழந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தேன். ஆமாம் இந்த நேரம் தான் அவர் என் தாயாரால் வெளியே தள்ளி விடப்பட்ட நேரம். அது தான் என்னுடைய தற்போதைய சோகத்தின் ஆரம்பம்.
அவர் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் மீண்டும் அவருடன் சேர்ந்து அவர் வாங்கிக் கொடுத்த புத்தாடை உடுத்திக் கொண்டோம். இரண்டாம் முறை புத்தாடை உடுத்திய சமயம் நான் சந்தோஷப்படவில்லை. காலையில் இருந்த சந்தோஷம் பிற்பகலில் இல்லை.
அவராகவே என்னிடத்தில் அவர் தனது குடும்பத்துடன் வந்து அழைத்துச் சென்றமையால் அவருடைய திருமணத்திற்குச் சென்று கலந்து கொள்ளலாமா என கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். தீபாவளிக்கு முன்னரும் தீபாவளிக்குப் பின்னரும் தான் பயணச் சீட்டு கிடைப்பதில் கஷ்டம் இருக்கும். அப்போது ஒன்றும் கூட்டம் இருக்காது. எனவே சென்று வரலாமா எனக் கேட்டார். நான் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டேன். அவர் காரணம் தெரிந்து கொள்ள ஆசைப் பட்டார். நான் சொல்லவில்லை.
திருமணப் பந்தியில் அனைவர் முன்னிலையிலும் அவர் எனக்கு ஊட்ட அவருக்கு நான் ஊட்ட மிகவும் சந்தோஷமாக நாம் இருவரும் இருந்திருக்க வேண்டும்.
நான் அவது சுண்டு விரல் பற்றிக் கொண்டு அக்கினியை வலம் வரும் சமயம்அவருடைய நண்பர்கள் மற்றும் என்னுடைய காம்பவுண்ட் தோழிகள் புடைசூழ நம்மைக் கிண்டலடித்து இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நான் அவரை விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டு வெற்றி பெற்றதை என்னுடைய தோழிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரத்துடன் கொண்டாடி இருக்க வேண்டும். அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. அவருக்கும் அதே நிலை.
நான் போனாலும் அவருடைய தாயார் நான் மறுமகளாக வரவில்லை என்று என்னைக் கண்டதும் அழ ஆரம்பித்து விடுவார்கள். திருமணம் நடக்க வேண்டிய சந்தோஷமான இடம் சோகமானதாகி விடும். அனைவர் முன்னிலையிலும் நானும் அவரும் திருமணம் செய்து கொண்டு அனைவரிடத்திலும் ஆசி பெற வேண்டிய நான் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து தனியாக திருமணச் சாப்பாடு சாப்பிட்டு வர வேண்டும்.
திருமணத்திற்கான பரிசுப் பொருட்களை அவருடன் சேர்ந்து அவைரிடத்திலும் பெற வேண்டிய நான் அவருக்கு பரிசுப் பொருள் கொடுத்து அவரை துக்கத்தில் ஆழ்த்த வேண்டும்.
இதனையெல்லாம் நான் அவரிடத்தில் சொல்ல முடியாது. நான் சொன்னால் கேட்கக்கூடிய நிலையில் அவர் இல்லை. காரணம் போதை இன்னும் இறங்கவில்லை.
நாட்கள் உருண்டோடின.
இன்று அவருக்கு திருமண நாள். அவர் காலையிலேயே எழுந்து திருமண மண்டபத்தில் அமர்ந்து இருப்பார். அவருடைய உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆசி வழங்கிக் கொண்டிருப்பார்கள். அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவரைச் சுற்றி இருப்பார்கள்.
அவர் மணப்பெண் வீட்டிற்கு உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ திருமண ஊர்வலத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில் மணமகனாக அமர்ந்து மணப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கொண்டிருப்பார்.
(இந்த நேரத்தில் எனக்கு அந்த முஸ்லீம் ;பெண் ஞாபகமும் வந்து விட்டது. அவளுடைய கற்பனை அவர் முகத்தை மறைத்துக் கொண்டு குதிரை மீது அமர்ந்து வந்து கொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டிருப்பாள்.) மணப்பெண் வீட்டார் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்று மண மேடையில் அமர வைத்திருப்பார்கள்.
(இந்த நேரத்தில் எனக்கு அந்த முஸ்லீம் ;பெண் ஞாபகமும் வந்து விட்டது. அவளுடைய கற்பனை அவர் முகத்தை மறைத்துக் கொண்டு குதிரை மீது அமர்ந்து வந்து கொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டிருப்பாள்.) மணப்பெண் வீட்டார் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்று மண மேடையில் அமர வைத்திருப்பார்கள்.
இந்த நேரத்தில் அவர் என் கழுத்தில் நான் கட்டிக் கொள்ள வேண்டிய தாலியை மணமகள் கழுத்தில் கட்டியிருப்பார். நான் சொந்தமாகி இருக்க வேண்டிய அவருக்கு வேறொருத்தி சொந்தம் ஆகி இருப்பாள். அவர் இதயம் என்னிடம் இருந்தாலும் அவருடைய உடல் உயிர் ஆவி அனைத்தும் இன்னொரு பெண்ணுக்கு அக்கினி சாட்சியாக சொந்தமாகி இருக்கும்.
அவருடைய தாயார் என்னை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள விருப்பப்பட்டபடி புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு சகல விதமான மரியாதைகளுடன் அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்
இனிமேல் அவருக்கும் எனக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும். இதுவரை போல அவரால் என்னை அடிக்கடி இனிமேல் பார்க்க வர முடியாது. நானும் அவர் எப்போது வருவார் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நாட்கள் அதிகரிக்கும். இப்படித்தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தன. என்னுடைய உள்மனம் அழுது கொண்டு இருந்தது.
இப்போது அவருக்கு முதலிரவு ஏற்பாடாகி இருக்கும். முதலிரவுக்கு பால் பழங்களுடன் செல்ல வேண்டிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை என்பது போன்ற எண்ணங்கள் என்னைத் தூங்க விடவில்லை.
நான் அவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் இருவரும் இந்த நேரத்தில் சந்தோஷமாக இரவு முழுக்க உல்லாசமாக இல்லற சுகம் அனுபவித்திருப்போம். ஆனால் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை என்னும் சோகம் தான் எனக்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டு இருந்தது. எனக்கு அந்த இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.
வழக்கம் போல் என் தலையணை என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அதுவும் மௌனமாக அழுது கொண்டிருந்தது.
என் குழந்தை என்னிடத்தில் எழுந்திரு பல் துலக்கி விட்டு காலை டிபன் சமைக்கலாம் என்று சொன்ன சமயம் விடிந்திருந்தது.
காலையிலும் என்னுடைய எண்ணங்கள் அவரை நான் திருமணம் செய்திருந்தால் என்னுடைய காம்பவுண்ட் தோழிகள் மற்றும் அவருடைய உறவினர்கள் முக்கியமாக அவரது தாயார் என்னிடத்தில் முதலிரவு பற்றிக் கேட்டு துழைத்து எடுத்திருப்பார்கள் என்னும் எண்ணம் தான்.
திருமணம் முடிந்து விட்டது. விரைவில் இங்குள்ள நண்பர்களுக்கும் தோழியர்க்கும் வரவேற்பு விருந்து நடத்தப் போவதை தெரிவிக்க விரைவில் என்னுடைய இல்லத்திற்கு வருகை தருவார் என்னும் எண்ணத்துடன் வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன். அவருடைய வருகைக்காக என்னுடைய செல்லப் பெண்ணும் காத்துக் கொண்டிருக்கின்றாள்
கோயிலில் சித்தர் சொன்ன வார்த்தை அதாவது தொடவும் முடியாது விடவும் முடியாது என்பதனை எண்ணிப் பார்த்தேன். அவரை என்னால் மறக்கவோ நினைக்காமல் இருக்கவோ முடியவில்லை.